/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
8,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
/
8,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
8,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
8,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 11, 2024 11:56 AM
கரூர்: ''8,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, கரூர் சட்டசபை தொகுதியில், 269 ஓட்டுச்சாவடி, கிருஷ்ணராயபுரத்தில், 260 ஓட்டுச்சாவடி. அரவக்குறிச்சியில், 253 ஓட்டுச்சாவடி, மணப்பாறையில், 324 ஓட்டுச்சாவடி, விராலிமலையில், 255 ஒட்டுச்சாவடி, வேடசந்துாரில், 309 ஓட்டுச்சாவடிகளுக்கு என மொத்தம், 1,670 ஓட்டுச்சாவடிகளில், 8,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 2,000 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,167 ஓட்டுகளை சரிபார்க்கும் கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்த பின், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். ஓட்டுப்பதிவின்போது, தொடர்புடைய ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு கூறினார். மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கண்ணன் உடனிருந்தார்.

