/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பேர் அனுமதி முறையை கைவிட கோரிக்கை
/
சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பேர் அனுமதி முறையை கைவிட கோரிக்கை
சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பேர் அனுமதி முறையை கைவிட கோரிக்கை
சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பேர் அனுமதி முறையை கைவிட கோரிக்கை
ADDED : மே 08, 2024 05:27 AM
கரூர் : சபரிமலையில் தினமும், 80 ஆயிரம் பேர் அனுமதி முறையை உடனடியாக கைவிட வேண்டும் என, அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரசார சபா மாநில தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கேரளா சபரிமலை தர்ம சாஸ்தா கோவிலில், மண்டல, மகர காலத்தில் தினமும், 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி மற்றும் முன்பதிவு இருந்தால் கூட உடனடி பதிவு இல்லை என, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் திருவாங்கூர் தேவசம் போர்டு, ஆன்லைனில் பதிவை கையில் எடுத்துக்கொண்டு பராமரிக்கிறோம் என்று தெரிவித்து பக்தர்கள், 12 மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டனர். அங்கு குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
சபரிமலையை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஆன்லைன் பதிவால் எந்தவிதமான சிரமமும் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தினமும், 80 ஆயிரம் பேர் அனுமதி முறையை உடனடியாக திரும்ப வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.