/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தை திருமணம் செய்த சிறுவன், சிறுமி இரண்டு பேர் கைது; போலீசார் விசாரணை
/
குழந்தை திருமணம் செய்த சிறுவன், சிறுமி இரண்டு பேர் கைது; போலீசார் விசாரணை
குழந்தை திருமணம் செய்த சிறுவன், சிறுமி இரண்டு பேர் கைது; போலீசார் விசாரணை
குழந்தை திருமணம் செய்த சிறுவன், சிறுமி இரண்டு பேர் கைது; போலீசார் விசாரணை
ADDED : ஏப் 18, 2025 01:56 AM
கரூர்:
குழந்தை திருமணம் செய்து கொண்டு வந்த சிறுமி, சிறுவர் சார்ந்த குடும்பத்தினர் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், இனாம் குளத்துாரை சேர்ந்தவர், 19 வயது சிறுவன். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார். குளித்தலை அருகில் கழுகூர் பஞ்.,சை சேர்ந்த, 18 வயது சிறுமி அதே பள்ளியில் பயின்றார். இருவரும் காதலித்து வந்தனர். இதனால், சிறுமிக்கு அவரது வீட்டில் கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமி, தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு காதலன், சிறுமியை அழைத்துக் கொண்டு அய்யர்மலை பகுதியில் இரவு தங்கியிருந்தார்.
நேற்று காலை அய்யர்மலை பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு, தனது பெற்றோருடன் காரில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது, குளித்தலை-- - மணப்பாறை நெடுஞ்சாலையில் செல்லும் போது, அக்காண்டிமேட்டில், சிறுமியின் உறவினர்கள் காரை வழி மறித்து, கண்ணாடியை உடைத்து சேதம் செய்து, திருமணம் செய்த சிறுவனையும், அவரது தம்பியையும் தாக்கினர்.
காரில் இருந்த சிறுமியை உறவினர்கள் அழைத்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் உறவினர்களை தோகைமலை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். சிறுவனின் தந்தை கொடுத்த புகார்படி, காரை வழிமறித்து தாக்கி சேதப்படுத்திய சிறுமியின் உறவினர்களான கழுகூர் சுப்பிரமணியன், 48, சஞ்சய், 19, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே வழக்கில் சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரண்டு குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டபகலில் சினிமா பாணியில் காரை வழிமறித்து தாக்கி, திருமணம் செய்து கொண்ட சிறுமியை அழைத்து சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.