/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவனுக்கு காயம்
/
நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவனுக்கு காயம்
நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவனுக்கு காயம்
நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவனுக்கு காயம்
ADDED : அக் 16, 2024 01:05 AM
நெல் அறுக்கும் இயந்திரத்தில்
சிக்கிய சிறுவனுக்கு காயம்
கரூர், அக். 16-
கரூர் அருகே, நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவனுக்கு, கையில் படுகாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் ஆதி கிருஷ்ணன், 17; இவர் கடந்த ஜூலை மாதம், கரூர் அருகம்பாளையத்தில் உள்ள, ராஜா மணி தோட்டத்தில், நெல் அறுக்கும் இயந்திரத்தில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆதி கிருஷ்ணனின் கை, இயந்திரத்தில் சிக்கியதில் படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, ஆதி கிருஷ்ணனின் தாய் விஷாலினி, 36, கொடுத்த புகார்படி, பாதுகாப்பு இல்லாமல் சிறுவனை வேலை செய்ய அனுமதித்த ரமேஷ் குமார், 28, தினேஷ் குமார், 30, ஆகியோர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.