/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே உடைந்த குழாய்; சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
/
கரூர் அருகே உடைந்த குழாய்; சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
கரூர் அருகே உடைந்த குழாய்; சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
கரூர் அருகே உடைந்த குழாய்; சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
ADDED : ஜூன் 03, 2024 06:58 AM
கரூர் : கரூர் அருகே, நேற்று குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் சென்றது.கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு, காவிரியாற்றில் வாங்கல், கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம், மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.பிறகு குழாய்கள் மூலம், பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.ஆனால், கடந்த சில நாட்களாக கரூர் மாநகராட்சியில், பல இடங்களில் குழாய்கள் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.
குறைந்தபட்சம், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில் செல்வதால், மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டு கொள்வது இல்லை. மேலும், பொதுக் குழாய்களிலும், உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது.இந்நிலையில் நேற்று, ராமனுார் பகுதியில் குழாய் உடைப்பால், தண்ணீர் பல மணி நேரம் வீணாக சாலையில் ஆறு போல ஓடியது.இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குடிநீர் குழாயை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.