/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தொழிற்பேட்டையில் குண்டும், குழியுமான சாலை
/
கரூர் தொழிற்பேட்டையில் குண்டும், குழியுமான சாலை
ADDED : நவ 28, 2024 01:04 AM
கரூர் தொழிற்பேட்டையில்
குண்டும், குழியுமான சாலை
கரூர், நவ. 28-
கரூர், பசுபதிபாளையம் தொழிற்பேட்டையில் உள்ள குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பசுபதிபாளையத்தில் உள்ள தொழிற்பேட்டை வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், டாஸ்மாக் ஆகிய குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பொருட்களை ஏற்றவும், இறக்கவும் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வளாகத்தில் உள்ள சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால், பள்ளமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனடியாக பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.