/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் குண்டும், குழியுமான தார் சாலை

ADDED : நவ 07, 2024 01:16 AM
கரூர், நவ. 7-
கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகிறது. இதனால், அப்
பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில், சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. எச்சரிக்கை போர்டுகள் இல்லை. திருச்சியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருச்சி செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குஉள்ளாகின்றனர்.எனவே, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமான, சுக்காலியூர் ரவுண்டானாவின் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில் உள்ள, குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து, எச்சரிக்கை போர்டு வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.