/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் விழுந்த கன்று உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்த கன்று உயிருடன் மீட்பு
ADDED : நவ 05, 2024 02:01 AM
கிணற்றில் விழுந்த
கன்று உயிருடன் மீட்பு
கரூர், நவ. 5-
வேலாயுதம்பாளையம் அருகே, கிணற்றில் விழுந்த பசுங்கன்றை, தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 50, விவசாயி. இவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசுங்கன்று ஒன்று, 60 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் கயிறு மூலம் இறங்கினர். பிறகு, பசுங்கன்றை கயிறு மூலம் கட்டி, மேலே தீயணைப்பு வீரர்கள் உயிருடன் கொண்டு வந்து, விவசாயி குணசேகரனிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.