/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராவல் மண் கடத்தல் 6 பேர் மீது வழக்கு பதிவு
/
கிராவல் மண் கடத்தல் 6 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 24, 2024 12:59 AM
கிராவல் மண் கடத்தல்
6 பேர் மீது வழக்கு பதிவு
குளித்தலை, நவ. 24-
குளித்தலை அடுத்த, ஆலத்துார் பஞ்., பகுதியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக, சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் மாலை வி.ஏ.ஓ., விஜேந்திரன், 48, ஆலத்துாரை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் துரைராஜ், பிச்சை ஆகியோர் உரிய அனுமதியின்றி கிராவல் மண்ணை லாரியில் அள்ளிக் கொண்டு சென்றதை பார்த்து, நிறுத்தி விசாரணை செய்தார்.
அப்போது, லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார், இது குறித்து வி.ஏ.ஓ., விஜேந்திரன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் துரைராஜ், பிச்சை, டிப்பர் லாரி டிரைவர், உரிமையாளர் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.