/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
/
1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
ADDED : மே 07, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் ஐந்து சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மாருதி ஆம்னி வேனில், 22 மூட்டைகளில் இருந்த, 1,100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராசு, 36; என்பவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து மாருதி வேன் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.