/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அஞ்சூரில் கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
/
அஞ்சூரில் கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
அஞ்சூரில் கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
அஞ்சூரில் கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : செப் 22, 2024 06:16 AM
அரவக்குறிச்சி: புகழூர் தாலுகா, அஞ்சூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா அஞ்சூர் கிராமத்தில், கவுசிக் அண்ட் கோ, ப்ளூ மெட்டல் நிறுவனம் மற்றும் பழனிச்சாமி நிறுவனத்தார், சாதாரண கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம், அஞ்சூரில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கல்குவாரி அமைந்தால் அப்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும் என, கிராம மக்களில் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதே சமயம், சமூக ஆர்வலர்கள் குவாரி அமைக்க உள்ள இடத்தில் குடியிருப்புகளும், குடிநீர் ஆதாரங்களும் இருப்பதால், அப்பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி அதிகாரிகள் ஆய்வு செய்த பின், முடிவை மேற்கொள்வார்கள் என தெரிவித்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கல்குவாரி உரிமையாளர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெங்கடரமண சுவாமி கோவிலில்
புரட்டாசி சனிக்கிழமை பூஜை
கரூர், செப். 22-
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று புரட்டாசி முதலாவது சனிக்கிழமையையொட்டி நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, கல் யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும் அக்., 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில் நேற்று, முதலாவது சனிக் கிழமையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சிறப்பு பூஜையில், நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி வழிபட்டனர்.
இதனால், 50 க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலை சுற்றி, பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது.