/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்ட எதிர்பார்ப்பு
/
புகழூர் வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்ட எதிர்பார்ப்பு
புகழூர் வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்ட எதிர்பார்ப்பு
புகழூர் வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 11, 2024 11:56 AM
அரவக்குறிச்சி: பாலம் கட்டப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலானதால், இடிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாலம் கட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனுார் புகழூர் வாய்க்கால் குறுக்கே, 60 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள், காவிரி ஆற்றுக்கு சென்று குளித்தும், துணிகளை துவைத்தும் வந்தனர். அதேபோல ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று வாய்க்கால் ஓரத்தில் மேய்த்தும் வருகின்றனர். சில விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு இடுபொருள்களை கொண்டு சென்றும், நிலத்தில் விளைந்த விளைபொருள்களை எடுத்தும் வருகின்றனர்.
பாலம் கட்டப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலானதால் பழுதடைந்து எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்தனர். ஆனால், அதற்கு பதிலாக இதுவரை புதிய பாலம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

