ADDED : மே 03, 2025 01:04 AM
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பேராள குந்தாளம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குளித்தலை பகுதியில், வைகைநல்லுார் பஞ்சாயத்து கிராமங்களுக்கு பாத்தியபட்ட கோவிலாகும்.
கோவிலை புனரமைக்க வேண்டும் என கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், புனரமைப்பு பணிக்கு, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜை செய்தனர். நேற்று காலை 9:30 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பேராள குந்தாளம்மனுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
இந்த பூஜையில் பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.

