/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி
/
கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி
ADDED : மே 20, 2025 07:26 AM
கரூர்: கரூர் அருகே, ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 55; இவர் நேற்று இரவு, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சியில் இருந்து கோவைக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். மாயனுார்-கரூர் இடையே ரயில் சென்றபோது, ஆரோக்கியராஜூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுகுறித்து, ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனம், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டது. பிறகு, மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், ஆரோக்கியராஜ் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.