/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குவிந்த மாம்பழம்; ஆர்வத்துடன் வாங்கிய மக்கள்
/
கரூரில் குவிந்த மாம்பழம்; ஆர்வத்துடன் வாங்கிய மக்கள்
கரூரில் குவிந்த மாம்பழம்; ஆர்வத்துடன் வாங்கிய மக்கள்
கரூரில் குவிந்த மாம்பழம்; ஆர்வத்துடன் வாங்கிய மக்கள்
ADDED : மே 08, 2024 05:27 AM
கரூர் : கரூர் வட்டார பகுதிகளில், மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் கரூருக்கு, விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. கரூர் நகரில் வாங்கல் சாலை, கோவை சாலை, திருச்சி சாலை உழவர் சந்தை, வெங்கமேடு ஆகிய பகுதிகளில், மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. அல்போன்சா, செந்துாரம், கிளி மூக்கு ரக மாம்பழம் ஒரு கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.