/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
/
பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
ADDED : மார் 13, 2024 02:05 AM
கரூர்:கரூர்
லைட் ஹவுஸ் கார்னர் உழவர் சந்தை அருகே, பா.ஜ., சார்பில் பொதுமக்களிடம்
இருந்து ஆலோசனை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது.
மத்திய மாநகர
தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பிரதமர் மோடி,
வளர்ச்சியடைந்த பாரதம் எனும் உன்னத நோக்கத்தை அடைய, பொதுமக்களிடம்
ஆலோசனைகளை கேட்டிருந்தார். அதன்படி, மாவட்ட தலைவர்
செந்தில்நாதன் பொதுமக்களிடம் ஆலோசனை மனுக்களை பெற்றார். கரூர்
ராயனுாரில், பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்ச்சி தெற்கு மாநகர
தலைவர் ரவி தலைமையில் நடந்தது.
மாவட்ட பொதுச் செயலர்கள் ஆறுமுகம்,
சக்திவேல்முருகன், கோபிநாத், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம்,
ஈஸ்வரி, மாவட்ட செயலர் ரமேஷ், பிரசார பிரிவு மாநில செயலர் ராஜேஷ்குமார்,
விவசாய அணி மாவட்ட தலைவர் அக்னீஸ்வரா செல்வம் உள்பட பலர்
பங்கேற்றனர்.