/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்
/
பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்
ADDED : மார் 25, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை:கரூர்
-- வெள்ளியணை சாலையில் உள்ள வெங்ககல்பட்டியில், 200க்கும் மேற்பட்ட
வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால், இப்பகுதி பஸ்
ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூடம் இல்லை. நிழற்கூடம் அமைத்து தரக்கோரி,
அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு துறை அதிகாரிகள்
கண்டு கொள்ளவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மழை,
வெயில் காலத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டு அவதிப்படுகின்றனர்.
எனவே, வெங்ககல்பட்டி பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும். மேலும்,
அப்பகுதியில் வேகத்தடைகளும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

