/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
/
தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
ADDED : அக் 18, 2024 07:08 AM
அரவக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை மதுக்கான் சுங்கச்சாவடி சார்பில், சாலையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. தோஸ்த் சரக்கு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு, பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து நிலக்கோட்டை நோக்கி, காய்கறி ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சர் மினி லாரி வேகமாக வந்து தோஸ்த் வாகனம் மீது மோதியது. அப்போது பணியில் இருந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே கல்வார்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி கலைச்செல்வி, 37, மீதும் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
மேலும் சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த, கியா கார் மீதும் மோதியது. இதில் காரில் பயணித்த நபர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தோஸ்த் சரக்கு வாகன ஓட்டுனர், மினி லாரி டிரைவர் மதுசூதனன் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த கலைச்செல்வியை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதியதால், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.