/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தூளி கட்டி ஆடிய மாணவன் கழுத்து இறுக்கி உயிரிழப்பு
/
தூளி கட்டி ஆடிய மாணவன் கழுத்து இறுக்கி உயிரிழப்பு
ADDED : மார் 06, 2024 06:31 AM
அரவக்குறிச்சி : சேலையில் துாளி கட்டி விளையாடிய மாணவன், கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி குப்பை காட்டை சேர்ந்தவர் மறைந்த சபீர் மகன் முகமது அப்தாப், 13.
இவர், பள்ளப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்தாப் நேற்று முன்தினம், வீட்டிற்குள் சேலையில் துாளி கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, சிறுவன் அப்தாப் கழுத்தை சேலை இறுக்கி கொண்டது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவன் விளையாட்டாக செய்த காரியம் விபரீதத்தில் முடிந்ததால், குடும்பத்தினர் மற்றும் இப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

