/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் நின்ற காரில் திடீர் தீ விபத்து
/
சாலையோரம் நின்ற காரில் திடீர் தீ விபத்து
ADDED : மே 30, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூரில், சாலையோரம் நின்ற காரில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையோரம், போர்டு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று மாலை காரில் இருந்து புகை வருவதை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
பின், கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள், கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். அந்த காரின் உரிமையாளர் குறித்து விபரம் தெரியவில்லை. கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.