/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் போலீசார் குறித்து கணக்கெடுப்பு
/
நெருங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் போலீசார் குறித்து கணக்கெடுப்பு
நெருங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் போலீசார் குறித்து கணக்கெடுப்பு
நெருங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் போலீசார் குறித்து கணக்கெடுப்பு
ADDED : செப் 22, 2024 06:20 AM
கரூர்: ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், பல ஆண்டுகளாக ஒரே போலீஸ் ஸ்டே ஷனில் பணியாற்றி வரும், போலீசார் குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், வரும் ஜனவரி மாதம் நிறைவு பெறுகிறது. இதனால், வரும் நவம்பர் மாதம், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வகையில், ஆரம்ப கட்ட பூர்வாங்க பணி களை மாநில தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவும், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், ஓட்டுப்பெட்டிகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காவல் துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஒரே ஸ்டேஷனில், பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்வது உண்டு. தற்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் போலீசார் குறித்து கணக்கெடுக்கும் பணியை, அமைச்சு பிரிவு அலுவலர்கள் துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, சொந்த டிவிசனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ., க்கள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலை யொட்டி இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள, 157 கிராம பஞ்சாயத்துக்கள், எட்டு பஞ்., யூனியன்கள் மற்றும் ஒரு மாவட்ட பஞ்சாயத்துக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.