/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
ADDED : செப் 26, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கரூர், செப். 26-
வேலாயுதம்பாளையம் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், போத்தனுார் பகுதியை சேர்ந்தவர் பாபு, 37; இவர், நேற்று முன்தினம் மதியம் வேலாயுதம்பாளையம் அருகே, அதியமான்கோட்டை பிரிவு பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் செம்பாடம்பாளையம் பகுதியை சேர்ந்த கலையரசன், 29; என்பவர், பாபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4,200 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து, பாபு அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து, கலையரசனை கைது செய்தனர்.