ADDED : டிச 04, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பத்துார் பஞ்., மேலதாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி மகன் சதீஷ், 22; பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் மதியம், 4:00 மணிக்கு, சோம வாரத்தையொட்டி, அய்யர்மலை கோவிலுக்கு, தம்பி அருண் மற்றும் நண்பர்களுடன் சென்றார்.
படியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சதீஷூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, தந்தை பூபதி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.