/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
/
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
ADDED : அக் 29, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, அரசு கலை கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழலுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முதல்வர் (பொ) அன்பரசு தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் வாசிக்க, மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.
உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் தமிழ் துறை பேராசிரியர்கள் கோபிநாதன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.