ADDED : ஜூன் 20, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மக்கள் பாதை மேட்டு தெருவில், இரட்டை வாய்க்கால் மேல் பகுதியில், பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சிறுபாலம் கட்டப்பட்டது.
அதன் இருபக்கமும் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது. தற்போது, தடுப்பு சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர். எனவே உடைந்த தடுப்பு சுவரை இடித்து விட்டு, புதிய சுவரை கட்ட வேண்டும்.