ADDED : ஆக 30, 2026 06:02 AM
கரூர்:கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், 'விபத்து இல்லாத கரூர்' என்ற திட்டத்தின் கீழ், நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர், மனோகரா கார்னரில் இருந்து தொடங்கிய பேரணியை, ஏ.டி.எஸ்.பி., பால
முருகன்
கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோவை சாலை,
திருக்காம்புலியூர் வழியாக பேரணி மீண்டும், மனோகரா கார்னரை
அடைந்தது. பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்; டூவீலரில்
செல்லும்போது, 'ஹெல்மெட்' அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம்
ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய
அட்டைகளை கொண்டுச்சென்றனர். பேரணியில், கரூர் டவுன் டி.எஸ்.பி.,
ராஜராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகீராபானு, ஷேர்
ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
