ADDED : ஆக 30, 2026 06:02 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் தீயணைப்பு நிலையத்தில், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம், நடந்தது.
அதில், நிறுவனங்களில் தீ விபத்தை தடுக்கும் முறை, தீ விபத்து ஏற்படும்
பட்சத்தில்,
மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள், முதலுதவி சிகிச்சை முறைகள், தீ
விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் முறைகள் குறித்து,
தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் காட்டி
பயிற்சியளித்தனர்.
அதில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.
