/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்கிய குப்பை: தொற்று பரவும் அபாயம்
/
தேங்கிய குப்பை: தொற்று பரவும் அபாயம்
ADDED : டிச 08, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேங்கிய குப்பை: தொற்று பரவும் அபாயம்
கரூர், டிச. 8-
கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 48 வார்டுகள், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, காதப்பாறை, பஞ்சமாதேவி கிராம பஞ்சாயத்து பகுதிகளில், ஆங்காங்கே அள்ளப்படாமல் பல்வேறு இடங்களில் பல நாட்களாக தேங்கியுள்ளது.
கரூர் வட்டார பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால், தேங்கியுள்ள குப்பை அழுகி, துர்நாற்றம் வீசி வருகிறது. கரூர் வட்டார பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள குப்பையை உடனுக்குடன் அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.