sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை

/

பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை

பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை

பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை


ADDED : ஜூன் 20, 2024 07:12 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : பிற மாநில ஆம்னி பஸ்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதிலும், 1,535 ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன.

இவை தவிர, 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து, அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள் விதிகளை மீறி இயங்கி வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ் ஒன்றுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம், 4.32 லட்சம் ரூபாய் நிதி இழப்பு எற்படுகிறது. அதில், 105 ஆம்னி பஸ்கள் மட்டுமே முறையாக தங்களது பிற மாநில பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர். இன்னும், 800 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இனி, பிற மாநிலங்களில் பதிவு செய்து, அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பஸ்களின் விபரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பஸ்களில், பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us