/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கமேட்டில் சாலையோரம் தரைமட்ட கிணறு அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

ADDED : டிச 08, 2024 01:14 AM
வெங்கமேட்டில் சாலையோரம் தரைமட்ட கிணறு
அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
கரூர், டிச. 8-
கரூர், வெங்கமேடு பாலத்தை ஒட்டிய பகுதியில் இருந்து, வாங்கல் சாலை வரை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரம் மூன்றுக்கு மேற்பட்ட தனியார் இடங்களில் விவசாய கிணறுகள் உள்ளன. அந்த கிணறுகள் பாழடைந்து, குப்பை கொட்டும் தொட்டியாக மாறியுள்ளது. இவைகளில் தடுப்புசுவர்கள் இல்லாமல் தரைமட்ட கிணறுகளாக உள்ளன. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரம் வாகனங்களில் செல்வோருக்கு கிணறு இருப்பதே தெரிவதில்லை.
மேலும் அந்த பகுதியில் ஏராளமான செடி கொடிகள் படர்ந்துள்ளதால், பகலில் ஏராளமான கால்நடைகள் மேய்ச்சலுக்கு வரும். அவை, தரை மட்ட கிணற்றில் தவறி விழும் வாய்ப்பு அதிகம். அப்பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருவதாலும், மாணவ, மாணவியர், விளையாட்டுத்தனமான கிணற்றை எட்டி பார்க்கின்றனர். அவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. தற்போது மழை காரணமாக கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அசம்பாவித சம்பவம் நடக்கும் முன், கிணற்றுக்கு கிரில் கம்பிகள் கொண்டு மூடி போட வேண்டும் அல்லது அதன் அருகே தடுப்புச் சுவர் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.