/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை
/
பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 20, 2024 01:59 AM
கரூர், நவ. 20-
கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி அருகில் உள்ள, சிறிய பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியையொட்டி ராயனுார் பிரிவு சாலை செல்கிறது. இதில், தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளதால், ஏராளமான மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். பிரிவு சாலையில், மழைநீர் வடிகால் கால்வாய் மீது சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில்தடுப்பு சுவர் கட்டப்படவில்லை.
இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. மேலும், நடந்து செல்பவர்கள் கூட வாகனங்கள் வரும் சமயத்தில், ஒதுங்கும் போது நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே, விபரீதம் நடக்கும் முன், பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.