ADDED : பிப் 12, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பகுதியில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. அதிகம் தேங்கும் போது, மழை நீர் விவசாய நிலங்களுக்கும், கால்வாய் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் உள்ளது.
தற்போது மழைநீர் செல்லும் வழிகளில், அதிகமான செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி தருகிறது. இதனால் மழை நீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வழித்தடத்தில் வளர்ந்து வரும் புதர்களை அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.