/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
/
வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : செப் 07, 2025 01:02 AM
கிருஷ்ணராயபுரம் :பிள்ளபாளையம், சிறிய பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரைகளின் வளர்ச்சி காரணமாக, தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் சிறிய பாசன வாய்க்கால், லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில் உள்ள புதிய கட்டளை வாய்க்காலில் இருந்து பிரிந்து, விளை நிலங்களுக்கு செல்கிறது. வாய்க்கால் நீரை பயன்படுத்தி வாழை, வெற்றிலை, நெல் ஆகியவை சாகுபடி செய்து வருகின்றனர்.
பாசன வாய்க்காலில் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால், பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
குறைவான தண்ணீர் மட்டும் செல்வதால், பயிர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.