/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை தேவை
/
விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 26, 2025 01:47 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக காற்று வீசி வருகிறது. இப்பகுதியில் முருங்கை, நெல், கம்பு, சோளம் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்பும் அதிகளவில் உள்ளது. தற்போது பூக்கள் பூத்து முருங்கை விளைச்சல் ஏற்பட்டுள்ளது. முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக
உள்ளது.
எனவே முருங்கை மரங்களில், பூச்சி தாக்குதல்களை தடுக்க வேண்டிய நடவடிக்கை, பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி, அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். குறிப்பாக, காய்கறி பயிர்களில் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்
பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, விவசாயிகளுக்கு அரசு சார்பில் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.