/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : மே 25, 2025 01:28 AM
கரூர், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத கல் குவாரி உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில், பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய, அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்யும் பணிகள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குவாரி குத்தகைதாரர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதுமாக கடைப்
பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் தலைக்கவசம், பாதுகாப்பு உடை, காலணி போன்றவற்றை அணிந்து பணியாற்ற வேண்டும். வெடி பொருட்களை அனுமதி பெற்ற நபர்களிடம் இருந்து பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெடி வைப்பாளர் மூலமாக குறைந்த சக்தியுடன் வெடிக்க செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் அருகில் உள்ளோர் பாதிக்கப்படாத வகையில் வெடி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
காப்பீடு செய்திருத்தல் வேண்டும்
முதலுதவி பெட்டி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் முறையாக பதிவு செய்திருத்தல் வேண்டும். குவாரி தொழிலாளர்கள் பெயரில், கட்டாயம் காப்பீடு செய்திருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், குவாரி உரிமையாளர்களும், விதிகளை தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.