/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
ADDED : ஜூன் 21, 2025 01:06 AM
கரூர், கரூர் அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூடுதல் பதிவாளர் நேற்று ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை சரகத்தில் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், அயன் சிவாயத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. அதில், நேற்று கூடுதல் கூட்டுறவு பதிவாளர் சீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது, வேப்பம் புண்ணாக்கு அரைத்து தயாரிக்கும் இயந்திரங்களையும், அரைக்கப்பட்ட புண்ணாக்கு தரம் குறித்தும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, சரக துணைப்பதிவாளர் திருமதி, சார்ப்பதிவாளர்கள் மணி சபரீஷ், மல்லிகா, தாரணி உள்பட பலர் உடனிருந்தனர்.