/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இலவச பட்டா வழங்க கோரி ஆதித் தமிழர் பேரவை மனு
/
இலவச பட்டா வழங்க கோரி ஆதித் தமிழர் பேரவை மனு
ADDED : ஜூலை 22, 2025 01:14 AM
கரூர், மாவத்துார் பசுபதிபாளையத்தில், 30 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என, ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கடவூர் அருகில் மாவத்துார் பசுபதிபாளையத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனையில், சர்வே எண், வண்டி பாதை புறம்போக்கு என்று உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், நத்தம் நிலமாக மாற்றி தான் பட்டா வழங்க முடியும் என்று கூறுகின்றனர்.
இதற்கு பட்டா கேட்டு, பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். உடனடியான மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும், 28ல் கடவூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.