/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 13, 2024 03:45 AM
கரூர்:கரூர்
மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர்
விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.
அதில் வரும், 2026ல் சட்டசபை
தேர்தல் பணிகளை தொடங்குதல், பூத் கமிட்டி வாரியாக உறுப்பினர்கள்
கூட்டத்தை நடத்துதல், வாக்காளர் பட்டியல் குறித்த பணி, அ.தி.மு.க.,
ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட
திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றாத தி.மு.க., அரசின் வாக்குறுதி கள்
குறித்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வது குறித்து, மாநில அமைப்பு
செயலாளர் சின்னசாமி பேசினார்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர்
சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, பொருளாளர் கண்ணதாசன்,
மாணவர் அணி செயலாளர் சரவணன், விவசாய அணி தலைவர் பாலமுருகன், கரூர்
ஒன்றிய செயலாளர் கமல கண்ணன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர்
பங்கேற்றனர்.

