/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி கூட்டத்தில் வாயில் கறுப்பு துணி கட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்புச

ADDED : மார் 01, 2024 02:30 AM
கரூர்,:கரூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி, கறுப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ்குமார் ஆகியோர், பேச மறுக்கப்படுவதாக கூறி, வாயில் கறுப்பு துணியை கட்டி, கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
பின் அவர்கள், கூறியவதாவது:
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில், நாங்கள் கேள்வி எழுப்பும் போது, பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும், கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் மேயர் கவிதா கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறார். இதுபோல் எந்த மாநகராட்சியிலும் நடைபெறாது. கேள்வி எழுப்பியதற்காக இரண்டு கூட்டத்திலிருந்து எங்களை மேயர் சஸ்பெண்ட் செய்தார். அது குறித்து வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் காரணம் கேட்டதற்கு இதுவரை உரிய விளக்கம் தரப்படவில்லை.இவ்வாறு கூறினர்.