/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒத்த காலணியை வழிபட்ட அ.தி.மு.க., மாஜி அமைச்சர்
/
ஒத்த காலணியை வழிபட்ட அ.தி.மு.க., மாஜி அமைச்சர்
ADDED : அக் 13, 2024 08:48 AM
கரூர்: கரூர் அருகே, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு, காணிக்கை செலுத்த கொண்டு செல்லப்பட்ட ஒத்த காலணியை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வழிபட்டார்.திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பஞ்சாயத்து சின்னதம்பிபட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், சம்மாளி என்ற காலணியை தயார் செய்து, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு, புரட்டாசி திருவிழாவின் போது, ஆண்டு தோறும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு, மெகா சைசில் ஒரு காலணியை தயார் செய்து தலையில் வைத்து கொண்டு, 30க்கும்
மேற்பட்ட பக்தர்கள் தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக, திண்டுக்கல் சின்னதம்பிபாளையத்தில்
இருந்து கடந்த, 7ல் புறப்பட்டனர். கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளுக்கு ஒத்த காலணியுடன்
ஊர்வலம் சென்ற பக்தர்கள், நேற்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை என்பதால், கல்யாண
வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு ஒத்த காலணியை காணிக்கை செலுத்த வந்தனர்.அப்போது, அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, நிர்வாகிகளுடன்
கோவிலுக்கு வந்த, அ.தி. மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒத்த காலணி ஊர்வலத்தை
பார்த்ததும், நின்று சுவாமியை வழிபட்டு, காணிக்கை செலுத்தினார்.