/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
/
கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 23, 2024 01:37 AM
கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க.,
செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரம், அக். 23-
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாயனுாரில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலர் பாரி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம் நகரம், மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய, நகர செயலர்கள், கிளை செயலர்கள் மக்களை நேரில் சந்திந்து கட்சியை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி பிடிக்கும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அமைப்பு செயலர் வளர்மதி, மாவட்ட எம்.ஜி.ஆர்., அணி செயலர் தானேஷ் முத்துகுமார், பொதுக்குழு உறுப்பினர் நகுல்சாமி, நகர செயலர்கள் ராஜா, ராகவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.