/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., பிரசாரம் தொடக்கம்
/
கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., பிரசாரம் தொடக்கம்
கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., பிரசாரம் தொடக்கம்
கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., பிரசாரம் தொடக்கம்
ADDED : மார் 25, 2024 07:03 AM
கரூர் : கரூர் எம்.பி., தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.
கரூர் எம்.பி., தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கவேல், பா.ஜ., சார்பில் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, தி.மு.க., கூட்டணியில், கரூர் எம்.பி., தொகுதி காங்., கட்சி வேட்பாளராக ஜோதிமணி மீண்டும் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், நேற்று காலை, 8:30 மணிக்கு கோடங்கிப்பட்டி முத்தாளம்மன், பட்டாளம்மன், மாரியம்மன் கோவில்களில் சுவாமியை வழிபட்டு, பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் அசோகன் உள்பட, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.