/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதிகள் கேட்டு வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் மறியல்
/
அடிப்படை வசதிகள் கேட்டு வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் மறியல்
ADDED : மார் 08, 2024 07:14 AM
கரூர்: கரூர் அரசு வேளாண் கல்லுாரியில், அடிப்படை வசதிகளை செய்து தர கோரி, மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர், திருச்சி சாலையில் உழவர் சந்தை அருகில், கரூர் அரசு வேளாண் கல்லுாரி செயல்படுகிறது. நேற்று காலை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா ஆகியோர் உள்பட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மாணவ,மாணவிகள் கூறியதாவது: கடந்த, 2022ம் ஆண்டு கரூர் மாநகராட்சி திருமண மண்டபத்தில், கரூர் அரசு வேளாண் கல்லுாரி தொடங்கப்பட்டது. முதலாமாண்டு, 66 பேர், இரண்டாம் ஆண்டு, 68 பேர் என மொத்தம், 134 பேர் பயின்று வருகிறோம். திருமண மண்டபத்தில் கல்லுாரி நடைபெறுவதால், எவ்வித முறையான பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. முக்கியமான பயிற்சி வகுப்பு, செய்முறை வகுப்புகளுக்கு திருச்சி செல்ல வேண்டி உள்ளது. இன்னும், இடம் தேர்வு செய்து புதிய கட்டட கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. இந்த வருடம் மூன்றாம் ஆண்டு செல்ல இருப்பதால், போதிய பயிற்சிகள் இல்லாமல் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவ, மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின், அவர்கள், சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

