/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.69.91 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்

ADDED : ஜூன் 25, 2025 02:32 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள், 69 லட்சத்து, 91,170 ரூபாய்க்கு விற்பனையாகின.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 18,337 கிலோ தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சம், 56.49 ரூபாய், அதிகபட்சம், 66.65 ரூபாய், சராசரி, 65.69 ரூபாய் என, 4 லட்சத்து, 2,025 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய், 556 மூட்டை வரத்தானது. முதல்தரம் கிலோ குறைந்தபட்சம், 242.01 ரூபாய், அதிகபட்சம், 247.39 ரூபாய், சராசரி, 245.59 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சம், 173.99 ரூபாய், அதிகபட்சம், 242.99 ரூபாய், சராசரி, 235.49 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 24,276 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 56 லட்சத்து, 33,519 ரூபாய்க்கு விற்பனையானது.
எள், 129 மூட்டை வரத்தானது. கருப்பு எள், ஒரு கிலோ குறைந்தபட்சம், 94.09 ரூபாய், அதிகபட்சம், 113.89 ரூபாய், சராசரி, 104.09 ரூபாய்; சிவப்பு எள், ஒரு கிலோ குறைந்தபட்சம், 83.39 ரூபாய், அதிகபட்சம், 124.99 ரூபாய், சராசரி, 102.09 ரூபாய் என, 9,599 கிலோ எள், 9 லட்சத்து, 55,626 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 69 லட்சத்து, 91,170 ரூபாய்க்கு விற்பனையாகின.