/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.79.19 லட்சத்துக்குவேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.79.19 லட்சத்துக்குவேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : மே 06, 2025 02:04 AM
கரூர்:சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 79.19 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9,328 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 21.65 ரூபாய், அதிகபட்சமாக, 47.15, சராசரியாக, 43.65 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,854 கிலோ தேங்காய்கள், 89 ஆயிரத்து 649 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 171.01, அதிகபட்சமாக, 175.39, சராசரியாக, 173.71, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 104.99, அதிகபட்சமாக, 169.89, சராசரியாக, 151.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 10,573 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 16 லட்சத்து, 87 ஆயிரத்து, 607 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
எள் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 117.40, அதிகபட்சமாக, 149.20, சராசரியாக, 128.99, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 110.72, அதிகபட்சமாக, 131.09, சராசரியாக, 121.59, வெள்ளை ரகம் ஒரு கிலோ ஒரே விலையாக, 126.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 52,055 கிலோ எடையுள்ள எள், 61 லட்சத்து, 42 ஆயிரத்து, 361 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 79 லட்சத்து 19 ஆயிரத்து 617 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.