/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று 16 கிராமத்தில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம்

ADDED : ஜூன் 27, 2025 01:16 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், 16 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் இன்று (27ம் தேதி) நடக்கிறது.
பஞ்சமாதேவி, மண்மங்கலம், மூக்கணாங்குறிச்சி, ஆச்சிமங்கலம், இனுங்கனுார், ஆலமரத்துப் பட்டி, புஞ்சைகாளக்குறிச்சி, காருடையாம்பாளையம், கே.பேட்டை, ராஜேந்திரம் தெற்கு, ஊத்துப்பட்டி, கல்லடை கிராமம், செம்பியநத்தம், வெள்ளப்பட்டி, மாயனுார், கிருஷ்ணராயபுரம் வடக்கு ஆகிய கிராமங்களில், உழவரை தேடி வேளாண் திட்ட முகாம் நடக்கிறது.
இதில், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், அரசு திட்டங்கள் பற்றிய தகவல், உயிர்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள், வேளாண் விற்பனை சம்பந்தப்பட்ட தகவல்கள், கூட்டுறவு சங்கங்களிலும், வங்கிகளிலும் பயிர்க்கடன் பெற தேவையான உதவி உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்
படுகிறது.
தற்போது கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், பருவமழையை எதிர் கொண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ள இருக்கும் நிலையில், விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களையும் அறியலாம்.
இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.