/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டுமருதுாரில் உழவரை தேடி வேளாண்மை திட்ட முகாம்
/
மேட்டுமருதுாரில் உழவரை தேடி வேளாண்மை திட்ட முகாம்
ADDED : ஆக 09, 2025 02:01 AM
குளித்தலை,
குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கிராமத்தில் வேளாண்மை துறை மூலமாக உழவரை தேடி வேளாண்மை திட்ட முகாம் நடந்தது.
முன்னாள் யூனியன் குழு தலைவரும், குளித்தலை ஒன்றிய தி.மு.க., செயலருமான தியாகராஜன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் முன்னிலை வகித்தார். நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லப்பன், தனபால், அருள்குமார், தோட்டக்கலை அலுவலர் அதியமான், உதவி தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பொன்னையா ஆகியோர் தங்கள் துறைகளின் திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
மேட்டுமருதுார் உழவர் பயிற்சி நிலைய அமைப்பாளர் வீரமலை உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் செல்லப்பன் நன்றி கூறினார்.