/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாய தொழிலாளர்கள்
/
கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாய தொழிலாளர்கள்
ADDED : ஆக 06, 2025 01:36 AM
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கொத்த
மல்லி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, சிந்தலவாடி, வயலுார், பஞ்சப்பட்டி, கொசூர், தொட்டமங்கிணம் ஆகிய பஞ்சாயத்துகளில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் கொண்டு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது விதைகள் வளர்ந்து வருகிறது.
அதேசமயம், செடிகள் நடுவில் வளர்ந்துள்ள களைகளை முற்றிலும் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. வளர்ந்த செடிகள் பறிக்கப்பட்டு, உள்ளூர் வாரச்சந்தை மற்றும் கரூர், திருச்சி மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. கொத்தமல்லி கட்டு ஒன்று, 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சமீபத்தில் பெய்த மழையால், கொத்தமல்லி செடிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.