sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

/

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

15


ADDED : பிப் 09, 2026 06:41 AM

Google News

15

ADDED : பிப் 09, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அவர் 3 விதிமுறைகளை கொண்டு வர வலியுறுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். தற்போது அவரது கவனம் தேர்தல் மீது சென்றுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்ய போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.

* சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் ஓட்டளிக்க பதிவு செய்ய அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.

* அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

* மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாருக்கும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.

இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும், பின்பற்றுவதற்காக போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவை காப்பாற்றுங்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள்!

மற்றொரு பதிவில் அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நடந்து கொண்டிருக்கிறது என்று இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு வாழ்த்துக்கள். எங்களிடம் மிகவும் வலுவான அணி உள்ளது. அமெரிக்கா உங்களுக்காக காத்திருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us