/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வல்லம் கிளை பாசன வாய்க்காலில் நாணல் செடிகளால் விவசாயம் பாதிப்பு
/
வல்லம் கிளை பாசன வாய்க்காலில் நாணல் செடிகளால் விவசாயம் பாதிப்பு
வல்லம் கிளை பாசன வாய்க்காலில் நாணல் செடிகளால் விவசாயம் பாதிப்பு
வல்லம் கிளை பாசன வாய்க்காலில் நாணல் செடிகளால் விவசாயம் பாதிப்பு
ADDED : ஏப் 27, 2025 04:50 AM
கிருஷ்ணராயபுரம்: வல்லம் கிளை பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் வளர்ந்-துள்ளதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்., வல்லம் கிரா-மத்தில் கிளை பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த கிளை பாசன வாய்க்கால், மாயனுார் பகுதியில் இருந்து பிரிந்து புதுக்கோட்டை வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து பிரிந்து வருகிறது.இந்த கிளை வாய்க்கால் நீர், விளை நிலங்களுக்கு செல்கிறது. இந்த பாசன நீரை பயன்படுத்தி, வாழை, வெற்றிலை, எள், சோளம், நெல் ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்-றனர்.
தற்போது, வல்லம் கிளை பாசன வாய்க்காலில், அதிகளவில் நாணல் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், வாய்க்-காலில் தண்ணீர் வரும்போது குறைவான தண்ணீர் மட்டுமே செல்-கிறது. இதனால் விளை நிலங்கள் பாதிக்கின்றன. எனவே, தண்ணீர் விளை நிலங்களுக்கு செல்லும் வகையில், பாசன வாய்க்-காலில் வளர்ந்து வரும் நாணல் செடிகளை அகற்ற பஞ்., நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.